Kartharai Uyarthidum Kaalam Lyrics | கர்த்தரை உயர்த்தும் காலம் Lyrics | Tamil Christian Song Lyrics | Lyrics in Tamil and English

Kartharai Uyarthidum Kaalam Song Lyrics in Tamil
கர்த்தரை உயர்த்திடும் காலம்
இது நன்றியால் துதித்திடும் நேரம்
தேவ வார்த்தையை நம்பிடும் யாரும்
கிருபையைக் கொண்டாடிடுவோம்
ஒதுக்கப்பட்ட என்னை சேர்த்துக்கொண்டீர்
தள்ளப்பட்ட என்னை அணைத்துக் கொண்டீர்
கேட்டதைத் தந்திட்டீர், ஆசீர்வதித்திட்டீர்
கேட்க மறந்ததையும் சேர்த்துக் கொடுத்திட்டீர் "கர்த்தரை"
பலவீன நேரத்தில் சுமந்து கொண்டீர்
(என்) தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீர்
இதுவரைக் காத்தவர் இனிமேலும் காத்திடுவீர்
என்ற நிச்சயத்தை எனக்கு தந்தீர் "கர்த்தரை"
தோல்வி இல்லை எனக்குத் தொய்வும் இல்லை
எவரைக் கண்டும் எனக்கு பயமுமில்லை
அழைத்த ஆண்டவர் என்னோடு இருக்க
ஒருபோதும் அசைக்கப் படுவதில்லை "கர்த்தரை"
Kartharai Uyarthidum Kaalam Song Lyrics in English
Kartharai Uyarthidum Column
Ithu Nanriyaal Thuthithidum Neram
Deva Vaarththaiyai Nambidum Yaarum
Kirubaiyai Kondaadiduvom
Odukkapatta Ennai Serthukkondeer
Tallapatta Ennai Anaithu Kondeer
Kettathai Thanthiteer, Aseervathithir
Ketka Maranthathaiyum Serthu Koduthittir "Kartharai"
Palaveen Nerathil Sumanthu Kondeer
(En) Tholviyin Nerathil Thol Kodutheer
Idhuvarai Kathavar Inimelum Kaaththiduveer
Endra Nichayaththai Enakku Thandheer "Kartharai"
Tholvi Illai Enakku Thoivum Illai
Evarike Kandum Enakku Bayamumillai
Azhaiththa Andavar Ennodu Irukka
Orupodhum Asycap Paduvathillai "Kartharai"
0 Comments